
யாழில் ரஷ்ய புத்தகக் கண்காட்சி
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – சேன்ஜோன்ஸ் அம்புலனஸ் சேவை மாவட்ட அலுவலக மண்டபத்தில் இன்று சனிக்கிழமை யாழ் . மக்களுக்கு ரஷ்ய புத்தகக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வானது சம்பிரதாய முறையில் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இப்புத்தக கண்காட்சியானது இன்று தொடக்கம் நாளை வரை நடாத்தப்பட உள்ளது.
இப்புத்தக கண்காட்சி மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .
மேலும், இப்புத்தக கண்காட்சியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதனை சிறுவர்கள், பெரியவர்கள் என பார்வையிட்டு வருகின்றனர்.
இதேவேளை இலவச புத்தகங்கள் பாடசாலை மாணவர்களுக்கும், யாழ்.நூலகத்திற்கும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


