கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் ஆங்கிலதின விழாவும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் அதிபர் கே.செல்வராஜா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச். ரியாஸா கலந்து கொண்டார்.

அத்துடன் பிரதியதிபர்களான பி.இராதாகிருஸ்ணன், பி.சண்முகநாதன், பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் கே.செல்லத்துறை உட்பட ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இங்கு மாணவர்களின் ஆங்கில ஆற்றலை வெளிக்கொணரும் வகையில் பாடல், நடனம், நாடகம், கவிதை ஆகியவை இடம்பெற்றன.

ஆங்கில போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர் .

மேலும், இம்முறை வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் இருந்து மருத்துவம், பொறியியல்,  வர்த்தகம், கலை ஆகிய பிரிவுகளில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டனர்.

இதற்கமைய, மருத்துவ துறையில்
நா. சனீத் சஞ்ஜீவ் 2A, B
வி. சுறோமிலா 2A, பி

பொறியியல் துறையில்
கி. சனோஜன் 3A, B
ஜெ. பிறெளமிகா  A, 2B

வணிகப் பிரிவில்
வா.நேதுசா 3A
வி.விதுஷாந் 3A
அ.கிசோன் 2A, B
க.நெப்போலியன் 2A, C
ஜெ.சுவேக்கா 2A, B

கலைப் பிரிவில்
சி.சிதுஷா 3A
நா.நர்மிதா A, 2B
ப. சிறிதரன் 2A,  B
ஜெ.அருள்சியா A, B, C  ஆகிய சிறப்பு பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

மேலும், பல மாணவர்கள்   பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.

இம் மாணவர்களின் வெற்றியில் பங்கேற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்விச் சமூகம் ஆகியவற்றுக்கு அதிபர் க.செல்வராஜா நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.