
வாகரையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தல் நிகழ்ச்சி திட்டம்
-வாழைச்சேனை நிருபர்-
சமூக மட்ட அமைப்பின் ஊடாக பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தல் என்ற நிகழ்ச்சி திட்டத்தின் மூலம், மட்டக்களப்பு வாகரை ஆலங்குளத்தில் உள்ள ஆயர் அம்பலவாணர் முன்பள்ளிக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஆலங்குள சனசமூக அபிவிருத்தி குழுத் தலைவர் சு.சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வாகரை பிரதேசத்திற்கான சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் எம்.கருணாநிதி, கிறிசாலிஸ் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் பா.மிதுனன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான நிதி அணுசரனையினை கிறிசாலிஸ் எனும் அரசசார்பற்ற அமைப்பு வழங்கியிருந்தது.
இதன்போது முன்பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றன.
