ஈட்டி எறிதலில் பளை மத்திய கல்லூரி மாணவன் சாதனை

-கிளிநொச்சி நிருபர்-

வடமாகாணம், வடமத்தியமாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், வடமேல்மாகாணம் ஆகிய ஐந்து மாகாணங்களை உள்ளடக்கிய Junior John Tarbat Championship Stage – 1 போட்டியில் 15 வயது ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கிளி/பளை மத்திய கல்லூரி மாணவன் சு. எழில் பிரியன் 43.64 அ தூரம் எறிந்து 1ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பயிற்றுவித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நிலக்கசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஹரிகரன் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் அதிபர் மற்றும் கல்லூரி நிர்வாகம் பாரட்டுக்களை தெரிவித்துள்ளது.