
இரத்ததான கொடையாளர்கள் கௌரவிப்பு
-யாழ் நிருபர்-
யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்யும் கொடையாளர்கள் இன்று கௌரவிக்கப்பட்டனர்.
வைத்திய சாலையில் அவசரமாக இரத்தம் தேவைப்படும் போது எந்தக் கடமையில் இருந்தாலும் உடன் வந்து இரத்த தானம் செய்யும் இவர்களின் கொடை போற்றப்பட வேண்டும் என்ற வகையில் இவ்வாறு கௌரவிக்கப்பட்டது.


