
நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் மகோற்சவத்தின் சூர்யோற்சவம்
-யாழ் நிருபர்-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் மகோற்சவத்தின் சூர்யோற்சவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
இவ்வாலயத்தில் மஹோற்சவம் கடந்த 02 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 26 ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவுடன் திருவிழா அனைத்தும் நிறைவடையும்.
25 நாட்கள் இடம்பெறும் உற்சவத்தில் 21.08.2022 மாலை கைலாசவாகனமும், 21.08.2022 மாலை வேல்விமானமும், 22.08.2022 தெண்டாயுதபாணி உற்சவம் 23.08.2022 மாலை ஒருமுகத்திருவிழாவும், 23.08.2022 சம்பறமும், 24.08.2022 தேர்த்திருவிழாவும், 25.08. 2022 அன்று 26.08.2022 காலை தீர்த்ததிருவிழாவும் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே ஆலயத்தின் மஹோற்சவ நிறைவடையும்.
இவ் மஹோற்சவத்திற்கு பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு நல்லையம்பதி அலங்காரக்கந்தனின் அருட்கடாச்சத்தினை பெற்றுச் சென்றனர்.
