பட்டிருப்பில் வலயமட்ட தமிழ் மொழித்தினப் போட்டி

-கல்முனை நிருபர்-

அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியின் வலய மட்டப்போட்டிகள் பிரதேச வலயக்கல்வி ரீதியில் நடைபெற்று வருகின்றன.

இன்று சனிக்கிழமை பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளின் வலய மட்ட தமிழ் மொழித்தினப் போட்டிகள் தமிழ்பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன் ஒழுங்கமைப்பில் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், கோட்டக்கல்வி அதிகாரிகளான பி.திவிதரன், எஸ்.அருள்ராஜா உட்பட அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

நாட்டில் நிலவிய கொவிட் மற்றும் அரசியல், பொருளாதார, சமுக நெருக்கடி காரணமாக கடந்த இரு வருடங்களாக அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகள் நடைபெறவில்லை.

இதனால் மாணவர்களின் கற்றலுக்கு மேலதிகமாக இணைப்பாட விதான செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு வருடமும் அகில இலங்கை தமிழ் மொழித்தினம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.