
மட்டு.வந்தாறுமூலையில் தொற்றா நோய்க்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு தேசிய பாடசாலையில் தொற்றா நோய்க்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையினால் மட்டக்களப்பு மருத்துவ சங்கத்துடன் இணைந்து வந்தாறுமூலை பிரதேச மக்களுக்கான மருத்துவ சேவை வழங்கப்பட்டது.
இதில் மட்டக்களப்பு வைத்தியசாலையின் சிறப்பு மிக்க வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, குருதி அமுக்கம் அளவிடல், கண்பார்வை, வாய், பல் போன்றவற்றுக்கான பரிசோதனை, பெண்களுக்கான விசேட பரிசோதனை, குருதியில் கொலஸ்ரோல், சீனி மற்றும் ஈமோகுளோபின் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சையும் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரணையை 306 சி2 மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினர் வழங்கியிருந்தனர்.

