மட்டக்களப்பு அருவி பெண்கள் அமைப்பினால் ஊட்டச்சத்து பால்மா வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டடத்தின் கோறளைபற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவானது கூடுதலான அடி நிலை கிராமங்களை கொண்ட பிரதேசமாகும்.

இப் பிரதேசத்தில் 7ம் மாத காலத்தினுள் 0-5 வயது 2567 பிள்ளைகள் உள்ளார்கள். இதில் ஓரளவான ஊட்டசத்து குறைவான பிள்ளைகள் 325 ஆகும்.

மிகவும் கூடுதலாக குறைபாடு உள்ள பிள்ளைகள் 67 பிள்ளைகள் ஆகும்.தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இக் கிராமத்தில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டத்தினை எதிர் நோக்குகின்றனர்.

இதனால் இங்கு பிறக்கும் குழந்தைகள் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பிள்ளைகள் கூடுதலாக காணப்படுகின்றார்கள்.

இதனால் மட்டகளப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்தியா சுகாதார சேவைகள் பனிமையுடன் இணைந்து இன்று சனிக்கிழமை மட்டகளப்பு மாவட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 40 பிள்ளைகளுக்கான ஊட்டச்சத்து பால்மா வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் மட்டகளப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பனிமனையின் பிரதி பணிப்பாளர் நாகாலிங்கம் மயூரன், பிராந்திய பல் வைத்திய அதிகாரி, கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார தாதி அதிகாரி, மேற்பார்வை குடும்ப நல உத்தியோகத்தர், குடும்பநல உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.