
களுவன்கேணி அருள்மிகு ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய திருச்சடங்கு கதவு திறத்தல்
-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வந்தாறுமூலை கிழக்கு களுவன்கேணி அருள் மிகு ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கு கதவு திறத்தல் நிகழ்வுடன் செவ்வாய்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
வந்தாறுமூலை தேவபுரம் நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து மடை எடுக்கின்ற நிகழ்வு ஆரம்பமாகி இரவு 7 மணியளவில் திருக்கதவு திறத்தல் நிகழ்வு இனிதே நடைபெற்றது.
தொடர்ந்து 7 நாட்கள் திருச்சடங்கு நடைபெற்று எதிர்வரும் 8 ஆம் திகதி தீ மிதிப்பு நிகழ்வுடன் திருச்சடங்கு இனிது நிறைவு பெறவுள்ளது.
5 ஆம் திகதியன்று பாற்குடபவணியும் விசேட பால் அபிஷேகப் பூசையும் இடம்பெறும்.
திருச்சடங்கானது ஆலயத்தலைவர் க.மகாலிங்கம் தலைமையில் பிரதமகுரு பூ.சண்முகம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
