களுவாஞ்சிகுடி-எருவிலில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர்-

கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பினால் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள எருவில் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவிக்கான மாதாந்த கொடுப்பனவு, எருவில் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் ஆகியன வழங்கிவைக்கப்பட்டன.

கருணை உள்ளம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கிலுள்ள பொருளாதார ரீதியில் நலிவற்ற குடும்பங்கள் மற்றும் மாணவர்களின் நல்வாழ்விற்கான உதவிகளை வழங்கிவருகின்றது.

இதற்கமைய இன்று எருவில் கிராமத்தில் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கான அனுசரணையினை திருகோணமலையைச் சேர்ந்த லண்டனில் வசிக்கும் சமுக ஆர்வலர் நிசாந்தன் நிரோஜினி தம்பதிகள் வழங்கியிருந்தனர்.

கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் ஏ.ரஜீதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் இ.வினோதினி, அனுசரணையாளர் சமுக ஆர்வலர் நிசாந்தன் நிரோஜினி, எருவில் கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகிகள், விளையாட்டுக்கழகங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு மக்களுக்கான சேவைகளை புரிந்து வரும் லண்டன் நிசாந்தன் மக்களால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.