
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை
-மன்னார் நிருபர்-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜையானது திருக்கேதீஸ்வரம் ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது .
மரித்த முன்னோர்களுக்கான பிதிர்கடன் பாலாவி தீர்த்தக் கரையில் தர்ப்பணம் செய்யப்பட்டது.
இதன்போது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய முன்னோருக்கான பிதிர் கடன் களை நிறைவு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

