
நாட்டில் தங்கத்தின் தற்போதைய விலை
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு செட்டியார் தெருவில், இந்த வாரம் 24 கரட் ஒரு பவுண் தங்கம் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாவிற்கும், 22 கரட் தங்கம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
இதேவேளை, தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.