
நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.