மட்டு.கல்லடியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு தெய்வநெறி கழகத்தின் அனுசரணையில் கல்லடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலுள்ள திருச்செந்தூர் கிராம உத்தியோகத்தர் பிரிவில், டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களாக அடையாளங் காணப்பட்ட கிணறுகளுக்கு நுளம்பு குடம்பிகளை உண்ணக்கூடிய மீன் குஞ்சுகள் இடும் நிகழ்வானது இன்று வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

இந் நிகழ்வில், தெய்வநெறி கழகத்தின் தலைவர் ரவீந்திரன், பொதுச் சுகாதார பரிசோதர் S.அமிதாப், ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.