
தென்னிந்திய திருசச்சபையின் மீள்பிரதிஷ்டை நிகழ்வு
-யாழ் நிருபர்-
தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் வட்டுக்கோட்டை பேராலயம் இன்று காலை 9.00 மணியளவில் தென்னிந்திய திருசச்சபையின் மீள்பிரதிஷ்டை பேராயர் டானியல் தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது..
400 வருட பழமையை கொண்ட குறித்த பேராலயமானது மீளப் புனரமைக்கபட்ட நிலையில் திருச்சபையின் பேராயரால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றதோடு உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் விசேட பாடல்களும் இடம்பெற்றன.
மேலும் திடப்படுத்தல், ஞானஸ்நானம், உதவி குருநிலைப்படுத்தல் என்பன பேராயர் டானியல் தியாகராஜாவின் வழிப்படுத்தலோடு இடம்பெற்றது
இந்த ஆராதனை வழிபாடுகளின் போது தென்னிந்திய திருச்சபை பேராயர் வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜா, தென்னிந்தியத் திருச்சபையின் மதகுருமார், உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின், திருச்சபையினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



