
-பதுளை நிருபர்-
நாட்டில் நிலவும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடால் மக்கள் தமது அன்றாட வாழ்வை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், பதுளை மாவட்டம் ஹப்புத்தலையில் 10 நாட்களுக்கு பிறகு இன்று செவ்வாய்க்கிழமை மண்ணெண்ணை விநியோகிக்கப்பட்டது.
1 கிலோ மீற்றர் வரையில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் மண்ணெண்ணையை பெற்றுச் சென்றனர்.
ராணுவ பாதுகாப்பிற்கு மத்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை வழங்கப்பட்டது;
மேலும், ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாவிற்கு மாத்திரம் மண்ணெண்ணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
