
சம்மாந்துறை நைனாகாடு கிராமோதயா சுகாதார நிலையத்திற்கான காணி உரித்தாவணம் கையளிப்பு
-கல்முனை நிருபர்-
சம்மாந்துறை நைனாகாடு கிராமோதயா சுகாதார நிலையத்திற்கான காணி உரித்தாவணம் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் எல் எம் .ஹனிபா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ எல் எம் றிபாஸிடம் காணி உறுதிப் பத்திரத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், கல்முனை பிராந்திய பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்பி அப்துல் வாஜித், சம்மாந்துறை பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் ரீ கே எம் சவாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
