நூலக திறப்புவிழாவும், மர்ஹும்களான உலமாக்களை நினைவு கூறல் நிகழ்வும்

-கல்முனை நிருபர்-

கல்முனை சமூக மேம்பாட்டுக்கான பழைய மாணவர்கள் செயல் வலையமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் மெளலவி எஸ்.எம்.நிம்ஸாத் மன்பயி தலைமையில்  நூலக திறப்பு விழாவும் மர்ஹும்களான உலமாக்களை நினைவு கூறல் நிகழ்வும் கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலில் மிக சிறப்பாக அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், நூலகத்திற்குரிய கிதாபுகளை சங்கைக்குரிய மெளலான மெளலவி அஷ்ஷெய்யிது எஸ்.எம். மஸ்ஹூர் தங்கள் ( அஸ்ஸகாபி அர்ரிபாயி) கரத்தினால் கிதாபுகள் அடுக்கிவைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, உலமாக்கள், நூல்கள் அன்பளிப்பாளர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டதுடன் மேலும் சங்கைக்குரிய மெளலானாவினால் நூலக பதிவேட்டில் நினைவு குறிப்பும் பதிவு செய்யப்பட்டது.

அமைப்பின் தலைவரினால் அமைப்பின் வளர்ச்சி பற்றியும், எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் உலமாக்கள் புத்தீஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.