மன்னாரில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை ஆரம்பம்

-மன்னார் நிருபர்-

மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி யின் இறுதி நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை  மாலை இடம் பெற்றும்.

குறித்த இரு நாள் சுற்றுப்போட்டியில் 10 கழகங்கள் கலந்து கொள்ள உள்ளது.

இறுதி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  மாலை 4 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறும்.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.