நாட்டு நிலை பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நகைச்சுவை

Sky news சர்வதேச தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

குறித்த நேர்காணலில் செய்தி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நாட்டின் நிலை பற்றி பிரமதர் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது பாதுகாப்பானது என தெரிவிப்பீர்களா?, என பிரதமரிடம் கேட்டதற்கு

ஆம், இலங்கையில் சுவாரஸ்யமான விடயங்களை அனுபவிக்க விரும்புபவர்கள் இங்கு வரலாம். அவர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொள்ளமுடியும். அவர்கள் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரும் பதாகைகளை ஏந்தலாம், அல்லது பிரதமர் பதவி விலகவேண்டும் என கோரும் பதாகைகளை ஏந்தலாம், அவர்கள் தங்களின் தெரிவுகளை தெரிவு செய்யலாம், என தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் மக்கள் விஜயம் செய்வதை விரும்பவில்லை என தெரிவிக்க முடியாது.

ஆனால் அந்நியசெலாவணி பற்றாக்குறை ஆர்ப்பாட்டம் அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு காரணமாக அவர்கள் இந்த தருணத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம், என்றும் தெரிவித்துள்ளார்.