வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய வாகனம்

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த கப்ரக வாகனம் வேகட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கப்ரக வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.