Last updated on April 28th, 2023 at 04:46 pm

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் கைத்துப்பாக்கி மற்றும் தங்கம் மாயம் | Minnal 24 News %

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் கைத்துப்பாக்கி மற்றும் தங்கம் மாயம்

அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுமதிப் பெற்ற குறித்த கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக, அவரின் சகோதரரால் அநுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்கம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களின் போது, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின், வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் மற்றும் நாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்கவின், வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.