
-யாழ் நிருபர்-
ஊரடங்கு சடத்தினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக நேற்று புதன்கிழமை நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு, யாழில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் குவிந்தனர்.
அந்தவகையில், சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் 800ற்கும் அதிகமானோர் வாகனங்களுடன் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முண்டியடித்ததை அவதானிக்க முடிந்தது.
இதனால் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதன்போது குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், வாகன நெரிசலை சீர் செய்யவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

