கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டம்

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம்  A9 வீதியில் கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

அவர்கள் போராட்டத்தின்போது தெரிவிக்கையில், தமது தொழிற்சங்க நடவடிக்கையை மக்கள் நலன் கருதி இன்று கைவிடுவதாகவும், வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பதால் அமைதியாக நாட்டு மக்கள் போராட வேண்டும், என தெரிவித்துள்ளனர்.