-பதுளை நிருபர்-
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்புத்தளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த தங்கமலை பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த குறித்த நபர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றதாகவும், பின்னர் வீதியோரமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறப்பதற்கு முன்னர் அங்கிருந்த சிலரிடம் அவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இவர் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது மரணிக்கவில்லை எனவும், மரணம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அப்புத்துத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.