திஹாரிய தாருஸலாம் ஆரம்பப் பாடசாலையில் பதவி ஏற்பு வைபவமும், சின்னம் சூட்டும் நிகழ்வும்!

-கிண்ணியா நிருபர்-

மேல் மாகாணம், கம்பஹா மாவட்டம், திஹாரிய தாருஸலாம் ஆரம்பப் பாடசாலையில் 2026 ஆம் ஆண்டிற்கான மாணவத் தலைவர்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டு குழு உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு வைபவமும் சின்னம் சூட்டும் நிகழ்வும், தாருஸலாம் ஆரம்பப் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.அஸ்மின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கம்பஹா களனி வலய தமிழ் மொழிப் பிரிவு பாடசாலைகளின் பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.டி.எம்.தௌசீர் கலந்து சிறப்பித்தார்.

மேலும், கௌரவ அதிதியாக ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.எம்.ரூமி கலந்து கொண்டதுடன், விசேட அதிதியாக CaFFE தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

அத்துடன், சிறப்பு அதிதியாக அத்தனகல்லை பிரதேச சபை உறுப்பினர் பாயிஸ் கலந்து கொண்டதுடன், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.