புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, இந்த விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாங்கள் வீட்டில் இல்லை என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவது திருடர்களுக்குச் சாதகமாக அமையும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, சுற்றுப்பயண அனுபவங்களை மீண்டும் வீடு திரும்பிய பின்னரே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு பொலிஸார் மேலதிகமாக கேட்டுக்கொண்டுள்ளனர்.