கூடுதல் செலவுகளை 3 மாத காலத்திற்கு அரசாங்கம் ஏற்கும் – ஜனாதிபதி

மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், அரசாங்கம் கூடுதல் செலவுகளை 3 மாத காலத்திற்கு ஏற்கும், என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அங்கு உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, மின்சாரம் உற்பத்தி செய்ய அனல் மின் நிலையங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கூடுதல் செலவுகளை மின் நுகர்வோர் மீது சுமத்துவதற்குப் பதிலாக, 90 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், அரசாங்கம் கூடுதல் செலவுகளை 3 மாத காலத்திற்கு ஏற்கும்.

இதற்காக 15 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும், என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.