முன்னாள் ஜனாதிபதி மைத்ரி மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது ஈரானிய மறைந்த உயர்மட்டத் தலைவர் (Supreme Leader) அயதுல்லாஹ் அலி கமேனிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்தினார்.

ஈரான் நாட்டு மக்களுடனான தனது ஒருமைப்பாட்டையும் (Solidarity), அந்நாட்டுடனான நீண்டகால நட்புறவையும், ஈரானியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேன மீள உறுதிப்படுத்தினார்.