
அமெரிக்க நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகிறார் நிக்கோலஸ் மதுரோ!
அமெரிக்கக் காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, இன்று புதன்கிழமை நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மதுரோ நீதிமன்றத்தில் ஆஜராகும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போது, நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தற்போது புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மதுரோவுக்கு எதிராக போதைப்பொருள் பயங்கரவாதத்திற்குச் சதி செய்தல், இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான வெடிபொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், அவர் தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
