
-மன்னார் நிருபர்-
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் ஏப்ரல் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சீரான முறையில் நாட்டு மக்களுக்கு எரி பொருளை பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் எதிர் கட்சியினர் சிறு பிள்ளை தனமாக கருத்துக்களை முன் வைத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
