
மத்திய கிழக்கு போரில் சுமார் 200 சிறுவர்கள் உயிரிழப்பு!
ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அமெரிக்க – இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் சுமார் 200 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமான அமெரிக்க – இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் 200 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஈரானில் 181 சிறுவர்கள், லெபனானில் 07 சிறுவர்கள், இஸ்ரேலில் 03 சிறுவர்கள் மற்றும் குவைத் ஒருவர் என மொத்தமாக 200 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
