டுபாய் மற்றும் ரியாத்துக்கான விமான சேவைகள் தொடர்ந்தும் ரத்து!
ரியாத் மற்றும் டுபாய் நோக்கி இன்று வியாழக்கிழமை பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களின் விபரங்கள் பின்வருமாறு,
கொழும்பு – டுபாய்: இன்று பயணிக்கவிருந்த UL 225 விமான சேவை
டுபாய் – கொழும்பு: டுபாயிலிருந்து நாடு திரும்பவிருந்த UL 226 விமான சேவை
கொழும்பு – ரியாத்: ரியாத் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 265 மற்றும் அங்கிருந்து வரவிருந்த UL 266 ஆகிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு வான்பரப்பில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, ஏனைய சில விமான சேவைகளும் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படவுள்ளன. இதனால் பயண நேரங்கள் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பயணிகள் மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 எனும் இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
