இலங்கையில் ஒரே நாளில் பாரிய தொகையால் அதிகரித்த தங்கத்தின் விலை!
இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கம் பவுண் ஒன்றின் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டு சந்தையிலும் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 425,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 53,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
