Warner Bros. Discovery நிறுவனத்தை வாங்க தயாராகும் Paramount Skydance

HBO Max இன் உரிமையாளரான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி(Waer Bros Discovery) , Paramount Skydance நிறுவனத்தால் $110 பில்லியன் மதிப்புள்ள மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையகப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை நடைபெற்ற மிகவும் போட்டி நிறைந்த ஏல செயல்முறை, Netflix ஒப்பந்தத்தில் இருந்து விலகியதுடன் முடிவடைந்தது.

2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 81 பில்லியன் டொலர் பங்கு மதிப்புள்ள பரிவர்த்தனையை முடிக்க எதிர்பார்ப்பதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

இரு நிறுவனங்களினதும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள், நேரடி ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் (Streaming) தளங்களை ஒன்றிணைப்பதன் மூலம், புத்தாக்கமான மற்றும் ஈர்க்கக்கூடிய கதை சொல்லும் வாய்ப்புகளை இந்த இணைப்பு உருவாக்கும் என ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நிறுவனங்களினதும் பணிப்பாளர் சபைகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.