நாடாளுமன்ற ஓய்வூதியம் நீக்குதல் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 152 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
வாக்களிப்பிலிருந்து எவரும் விலகியிருக்கவில்லை.
இதனிடையே, இந்த சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
