மட்டக்களப்பில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி-காவத்தமுனை பிரதான வீதியில், பால் பண்ணைக்கு முன்பாக சற்று முன் இடம்பெற்ற விபத்தில், இளைஞர்  ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

எதிர்திசையில் பயணித்த கிறவல் ஏற்றி வந்த கனரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த  இளைஞன் ஆபத்தான நிலையில்,  வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை கைது செய்த பொலிஸார், லொறியினை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.