வெடிக்காத நிலையில் இரு வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு குளத்தை அண்டிய பகுதியில், வெடிக்காத நிலையில் இரண்டு வெடி பொருட்கள், இன்று திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்ணில் புதையுண்ட நிலையில், கை குண்டு ஒன்றும் மற்றும் மோட்டார் செல் ஒன்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
