கண்டியின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

கண்டியின் பல பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 22 மணி நேரம் நீர் விநியோகம் தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு (NWSDB) அறிவித்துள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

அதன்படி, அஸ்கிரிய (நகர சபை), வெகிரிய மற்றும் பல்லேமுல்ல (புதிய மற்றும் பழைய), யடிஹலகல, கொண்டதெனிய, ரஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம், மெதவல (பழைய மற்றும் புதிய) சேவை நீர்த்தேக்கங்கள் மற்றும் கஹவத்த, குருகொட, புலுகொஹொதென்ன, கிரகடுவ, கஹல்ல, தெலம்பு கஹவத்த, நுகவெல, பலங்கல, கலகெதர மற்றும் மாவதகம ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.