வாழைச்சேனை விவசாயிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம்
வாழைச்சேனை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்யும் பொருட்டான வழிகாட்டல் தேசிய வேலைத்திட்டம் பெப்ரவரி 3 தொடக்கம் 17ஆம் திகதிவரை வரை இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் தவணை கமநல அமைப்பு கண்ட விவசாயிகளை Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை வாழைச்சேனை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.ஜெயக்காந்தன் அவர்களின் தலைமையில் சந்திவெளி புதுப் பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஊக்குவிப்பு வேலைத்திட்டத்திட்டத்தில் சுமார் 250 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கான நிகழ்நிலை பதிவுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயம் ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர், தவணை கமநல அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
