கந்தளாய் ஜயந்திபுர மகா வித்தியாலயத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் ஜயந்திபுர மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் நீண்டகால இடவசதி குறையைத் தீர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம், உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

4.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டிடம், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

நீண்ட காலமாக நிலவி வந்த வகுப்பறைத் தட்டுப்பாட்டை நீக்கி, மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான கற்றல் சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது ஆளுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், கல்வித் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் உரையாற்றினர்.