மீண்டும் நிதி நன்கொடை

‘டித்வா’ (Dithwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள  ரீபில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு DFCC வங்கியினால் 50 மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமல் பெரேரா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சுவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அண்மையில் கையளித்தார்.