பெண்கள் அபிவிருத்தி – அரசியல் பங்கேற்பை மேம்படுத்தும் நிதியுதவி திட்ட நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் அபிவிருத்தி மற்றும் அரசியல் பங்கேற்பை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்வு இன்று திங்கட்கிழமை திருகோணமலை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

அரசியலில் ஈடுபாடு கொண்ட பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்ட குறித்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) நிதி உதவியுடன் Search for common Ground மூலமாக நடை முறைப்படுத்தப்படுகிறது.

இதில் வளவாளராக எம்.ஐ.எம்.சதாத் ,திட்ட வசதிப்படுத்துனராக துர்கா புலேந்திரன், சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் ஜெரோமி ரொமைன் ராஜெல் மற்றும் பெண் அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இது கிழக்கு மாகாணம் முழுவதும் 10 அரை நாள் கொண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன. இதில் பெண் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வெடிபொருள் அகற்றும் தொழிலாளர்கள், மற்றும் அரசாங்க அதிகாரிகள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பெண்களின் அரசியல் ,சமூக மற்றும் தீர்மானம் எடுக்கின்ற செயற்பாடுகளில் அர்த்தமுள்ள பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான நடைமுறை தீர்வுகளை ஆராயும் ஒரு பாதுகாப்பான மற்றும் கூட்டுறவான ஒரு தளத்தை வழங்குகின்றது.

குறித்த கலந்துரையாடலின் மூலமாக பெண்களின் முடிவு எடுத்தல் நிலமையின் போது தற்காலிக நிலையை புரிதல், தடைகளை அடையாளம் காணுதல், போன்றவற்றை வெளிப்பாடாக எதிர்பார்க்கப்படுகிறது.