
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், தணிக்கை சிக்கல்களைக் கடந்து நாளை சனிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.
தணிக்கை சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது மத்திய தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தணிக்கை சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ஜனவரி 10-ஆம் திகதி இத்திரைப்படம் உலகெங்கும் வெளியாகிறது.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
தமிழ்நாடு முழுவதும் நாளை 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
