500 பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் சுமார் 500 பொலிஸார் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஒரு குழுவை பணிநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பஹலகம பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது, பொலிஸ் மாஅதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
