
மட்டக்களப்பு கல்லடி பாலம் பிரதான வீதியில் ஜீவி வைத்தியசாலைக்கு எதிராக உள்ள காப்புறுதி நிறுவனத்தின் முன்பாக உள்ள கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்றை சேர்ந்த 22 வயது இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும்இ தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸாi’ தெரிவித்தனர்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
