துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான 2026 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒரு அறிக்கையை வெளியிட்ட அமைச்சகம், செப்டம்பர் 1, 2025 அன்று தொடங்கி, டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த உரிமப் புதுப்பித்தல் காலம், நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் அறிவித்துள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு இப்போது ஜனவரி 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.