மோட்டார் சைக்கிள்-கார் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் கலுகெலை சந்தி அருகில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மோட்டார் சைக்கிள்களும் காரொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என நுவரெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து பதுளை வீதியில் இணையும் ஒரு துணைப்பாதை வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள், பிரதான சாலைக்குள் நுழையும் போது, ​​வெலிமடையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த கார் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணையை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.