
கிளிநொச்சியில் 131 கிலோ கேரளக் கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் 131 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.
சந்தேகநபர் ஒருவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கஞ்சா மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
